News September 13, 2025
தென்காசி: குளத்தில் இருந்து எடுக்கபடும் தண்ணீர்

தென்காசி, குத்துக்கல்வலசை ஊராட்சி அடவிநயினார் அணை நீர்ப்பாசனத்திற்குட்பட்ட பொதுபணித்துறைக்கு சொந்தமான நெடுங்குளத்தில் 10க்கும் மேற்பட்ட தண்ணீர் டேங்கர் மூலம் வணிக பயன்பாட்டுக்குக்காக எடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிப்பதாக சொல்லபடுகிறது. நிலத்தடி நீர் சீக்கிரம் வரண்டு விவசாய பயிர்களை காப்பாற்ற முடியாத சூழல் என விவசாயிகளின் வேதனை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News September 13, 2025
ஆலங்குளம் அருகே தவறான சிகிச்சையால் உயிரிழப்பு

அடைக்கலப்பட்டணத்தில் அமைந்துள்ள கிளினிக்கில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவரின் தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்ததாக எழுந்த புகாரின்பேரில் பாவூர்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அனுமதியின்றி அந்த கிளினிக் செயல்பட்டதாக கூறி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா இன்று கிளினிக்கை பூட்டி சீல் வைத்தார்.
News September 13, 2025
தென்காசி: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி!

தென்காசி மக்களே செப்.13ம் தேதி இன்று முதல் தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கு <
News September 13, 2025
தென்காசி: “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் ஆட்சியர் ஆய்வு

தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சி, சிந்தாமணியில் நேற்று நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், புளியங்குடி நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் ஆய்வு மேற்க்கொண்டார்.