News September 13, 2025
உங்கள் மூளையை மெல்ல கொல்லும் 6 பழக்கங்கள்

உடலில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் மூளையின் கட்டுப்பாட்டில் தான் நடக்கிறது. அப்படிப்பட்ட ஒரு உறுப்பை சில மோசமான பழக்கவழக்கங்களால் நாம் கெடுத்துக்கொண்டிருக்கிறோம். இதனால் மறதி, Brain Fog, தலைவலி போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே, உங்களது மூளையை கொல்லும் 6 மோசமான பழக்கங்கள் என்னென்ன என்பதை போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த தவறுகளை செய்பவர்களுக்கு இத SHARE பண்ணுங்க.
Similar News
News September 13, 2025
இனி ஷாம்பு முதல் ஹார்லிக்ஸ் வரை விலை குறைகிறது!

ஜிஎஸ்டி வரம்பு மாற்றத்தை அடுத்து ஹிந்துஸ்தான் யுனிலிவர் தனது பொருள்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. அதன்படி, ஹார்லிக்ஸ், ப்ரூ காப்பித்தூள், டவ் ஷாம்பு, கிசான் ஜாம், லக்ஸ் சோப், லைஃப் பாய் சோப் உள்ளிட்டவற்றின் விலை செப்.22-ம் தேதி முதல் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருள்களின் மாற்றியமைக்கப்பட்ட விலையை மேலே உள்ள போட்டோஸை ஸ்வைப் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News September 13, 2025
திமுகவை சீண்டிய விஜய்

விஜய் தனது முதல் பரப்புரையை, திமுக எதிர்ப்புடனேயே தொடங்கியுள்ளார். 2021-ல் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பழைய ஓய்வூதிய திட்டம் என்னாச்சு? மாதந்திர மின்கட்டண கணக்கீடு என்னாச்சு? மாணவர்களின் கல்விக் கடன் ரத்து என்னாச்சு? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய விஜய், நாம் கேட்டுக்கொண்டே இருந்தாலும் அவர்களிடம் பதில் இல்லை என சாடியுள்ளார்.
News September 13, 2025
தொண்டர்களாக மாற மறுக்கும் ரசிகர்கள்?

விஜய் அரசியல் கட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டாகிவிட்டது. இன்னும் கட்சி சார்ந்த நிகழ்வுகளுக்கு செல்லும் தவெக தொண்டர்கள், தியேட்டருக்கு செல்வது போன்ற மனநிலையிலேயே உள்ளனர். விஜய்யின் பேச்சை மீறி குழந்தைகளை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது, அருகில் இருக்கும் கட்டடங்கள், மரங்கள் மீதேறி அலப்பறை செய்வது போன்ற நிலையே தொடர்கிறது. இன்றைய சம்பவங்களும் அதையே சொல்கின்றன. தேர்தலுக்குள் இந்த நிலை மாறுமா?