News September 13, 2025

விருதுநகர்: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

Similar News

News November 6, 2025

விருதுநகரில் துப்பாக்கியால் சுட்டு பிடித்த அதிகாரிகள்

image

காப்புக்காடுகள் பகுதியில் 3 கிமீ மேல் வரும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இதையடுத்து விருதுநகர் அருகே மன்னார்குடியில் பயிர்களை சேதப்படுத்திய 1 1/2 வயது காட்டுபன்றியை அக்.24 அன்று வனத்துறையினர் சுட்டு கொன்றனர். இதேபோல் நேற்று இரவு ஆவுடையாபுரத்தில் ஸ்ரீவி வனத்துறை அதிகாரி செல்வமணி தலைமையில் ஒரு காட்டுப்பன்றியை சுட்டு பிடித்தனர்.

News November 6, 2025

சிவகாசியில் சுட்டுப் பிடிக்க அனுமதிக்க கோரி மனு

image

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகாசி அருகே ஈஞ்சார் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களை தொடர்ந்து காட்டு பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு ஆவண செய்திட வலியுறுத்தி சார் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

News November 6, 2025

அருப்புக்கோட்டையில் தவறி விழுந்து உயிரிழப்பு

image

காரியாபட்டி அருகே வக்கனாங்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் ராதா (58). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று (நவ. 5) பிற்பகல் வேளையில் அருப்புக்கோட்டை சின்னப்புளியம்பட்டி பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கால் இடறி கீழே விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!