News September 13, 2025

தாம்பரம்: உங்க வீட்டில் செல்லப்பிராணி இருக்கா?

image

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் தங்களது செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்திய விபரம் (ம) கால்நடை மருத்துவரின் விபரங்களை, tcmcpublichealth.inPetAnimalRegister என்ற இணையதளத்தில், அவற்றின் உரிமையாளர்கள் பதிவேற்றம் செய்து, உரிமச் சான்றிதழை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள மாநகராட்சி தெரிவித்துள்ளது. வழங்கப்பட்ட தேதியிலிருந்து, ஓராண்டு காலத்திற்கு உரிமச் சான்றிதழ் செல்லுபடியாகும்.

Similar News

News September 13, 2025

செங்கல்பட்டு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் (ம) உதவியாளர் பணிகளுக்கு நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்பட உள்ளனர். இந்நிலையில் மேற்கண்ட பதவிகளுக்கு எழுத்து தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 15-ந்தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளதாக கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு 044- 2742 6020 என்ற எண்ணை அழைக்கலாம்.

News September 13, 2025

குரோம்பேட்டை அருகே விபத்து

image

திருநீர்மலையை சேர்ந்தவர் ரங்கநாயகி. இவர் குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஜி.எஸ்.டி., சாலையை கடக்க முயன்றார். அப்போது தாம்பரத்தில் இருந்து கே.கே.நகர் நோக்கி சென்ற மாநகர பேருந்து மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் என்பவரை (41) கைது செய்து விசாரிக்கின்றனர்.

News September 13, 2025

அனகாபுத்தூர்: கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

image

அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் செல்வம் (53). இந்து பாரத முன்னணி மாநில தலைவராக உள்ளார். இவர் பல்லாவரத்தில் இருந்து நிர்வாகிகளுடன் தனது காரில் அனகாபுத்தூர் நோக்கி சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் காரை வழிமறித்து தாக்க முயன்றதாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை செய்து அனகாபுத்தூரைச் சேர்ந்த பாலாஜி, சதாம் உசேன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!