News September 13, 2025
திண்டுக்கல்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை!

▶️திண்டுக்கல் மக்களே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ▶️இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும் ▶️ஆன்லைன் தேர்வு, நேர்காண மூலமே ஆட்கள் தேர்வு நடைபெறும் ▶️இதற்கு உரிய ஆவணங்களுடன் வரும் நவ.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <
Similar News
News September 13, 2025
திண்டுக்கல்: வாலிபர் போக்சோவில் கைது!

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அஜீத் ( 21) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி மதுரைக்கு அழைத்துச் சென்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நிலக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் நிலக்கோட்டை போலீசார் அஜீத்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
News September 13, 2025
திண்டுக்கல்லில் செயின் பறிப்பால் பரபரப்பு!

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மனைவி ஜெயந்தி(40). இவர், தனியார் டியூசன் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று(செப்.12) இரவு டியூசன் முடித்து இ.பி காலனி சாலையில் நடந்து வந்துகொண்டிருந்த போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 13, 2025
திண்டுக்கல்லில் தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் நம்பர்!

திண்டுக்கல் மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!