News September 13, 2025
தவெக கூட்டணி? காங்கிரஸ் தலைமை விளக்கம்

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைய உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில், TNCC பேரவை குழு தலைவர் ராஜேஷ், 2006-ம் ஆண்டிலேயே விஜய், காங்கிரஸ் கட்சியில் சேர விரும்பி ராகுல் காந்தியை சந்தித்து பேசியதாக கூறியுள்ளார். மேலும், அவர் மத்திய அரசை விமர்சிப்பதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார். இது, 2026-ல் கூட்டணி மாற்றத்திற்கு காங்., தயாராவதற்கான சமிக்ஞை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். உங்க கருத்து என்ன?
Similar News
News September 13, 2025
BCCI தலைவர் ரேஸில் இணைந்த ஹர்பஜன்

பஞ்சாப் கிரிக்கெட் சங்கம், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை BCCI-ன் தலைவர் பதவிக்கு முன்மொழிந்துள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்களால் முன்மொழியப்பட்டவர்களே BCCI தலைவருக்கான தேர்தலில் போட்டியிட முடியும். ஹர்பஜன் சிங் இதுவரை இந்திய அணிக்காக 367 சர்வதேச போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். வரும் 28-ம் தேதி BCCI தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
News September 13, 2025
ஒவ்வொரு மாதமும் ₹9,250 கிடைக்கும்; அடடே திட்டம்!

ஒருமுறை முதலீடு செய்தால் மாதம் ₹9,250 வட்டியாக கொடுக்கிறது போஸ்ட் ஆபிஸின் மாதாந்திர வருமான திட்டம். இத்திட்டத்தில், ₹1 லட்சம் – ₹15 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்யலாம். உதாரணத்துக்கு, ₹15 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்கு மாதம் ₹9,250 வருமானமாக கிடைக்கும். 5 ஆண்டுகள் கழித்து திட்டம் முதிர்ச்சியடைந்தவுடன் நீங்கள் செலுத்திய ₹15 லட்சம் உங்களுக்கு திருப்பிக்கொடுக்கப்படும். SHARE.
News September 13, 2025
அனுஷ்காவை தொடர்ந்து ஐஸ்வர்யா லட்சுமி விலகல்

சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக ஐஸ்வர்யா லட்சுமி அறிவித்துள்ளார். தனக்காக SM வேலை செய்யும் என்று நினைத்தேன், ஆனால் அதற்காக நான் வேலை செய்வதாகிவிட்டதாக கூறியுள்ளார். இன்றைய காலத்தில் இன்ஸ்டாவில் இல்லையென்றால் யார் நினைவிலும் இருக்க மாட்டேன் என்பது தெரிந்தும், ரசிகர்களை நம்பி திரையில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நேற்று முதல் அனுஷ்காவும், SM-க்கு தற்காலிக லீவ் கொடுத்திருந்தார்.