News September 13, 2025

புதுக்கோட்டை: நாய் குறுக்கே வந்ததில் தவறி விழுந்த பெண்

image

அரிமளம் அருகே உள்ள கே.புதுப்பட்டியிலிருந்து காரைக்குடிக்கு மீனாள் (35) ஸ்கூட்டியில் சென்றுள்ளார். அப்போது,கே.புதுப்பட்டி அடுத்த அணிக்கனி பாலம் அருகே நாய் குறுக்கே வந்ததால் பைக்கிலிருந்து தவறி விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். மேலும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது தாய் ராக்கம்மாள் (58) அளித்த புகாரில் கே.புதுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 13, 2025

புதுக்கோட்டை உணவு சரியில்லையா? இத பண்ணுங்க!

image

புதுக்கோட்டை மக்களே, உணவுப் பாதுகாப்பு புகார்களுக்கான வாட்ஸ்அப் எண் (9444042322) தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் உணவின் தரம், கலப்படம் குறித்த புகார்களை, அந்த எண்ணிற்கு பதிலாக<> TN Food Safety Consumer App<<>> மூலம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய மயிலாடுதுறை மாவட்ட உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலகத்தை அணுகலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 13, 2025

புதுக்கோட்டை: ரூ.3 லட்சம் சம்பளத்தில் ஜெர்மனியில் வேலை

image

ஜெர்மனி நாட்டில் வேலைவாய்ப்பை பெறும் வகையில், ஜெர்மன் மொழி தேர்விற்கான இலவச பயிற்சி தாட்கோ சார்பில் அளிக்கப்படுகிறது. இதற்கு Nursing / B.E / B.Tech முடித்த, 35 வயதுக்கு உட்பட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வகுப்புகளை சேர்ந்த நபர்கள், <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பிறகு மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பளத்தில் பணி வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News September 13, 2025

புதுக்கோட்டை மக்களே கலெக்டர் அழைப்பு!

image

புதுக்கோட்டையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடையை தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் இன்று (செப்.,13) குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை உள்ளிட்டவற்றிற்கான மனுக்களை கொடுக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். SHARE IT

error: Content is protected !!