News September 13, 2025
திருப்பத்தூர்: மானியத்தில் ஸ்கூட்டர் வாங்க வாய்ப்பு

திருப்பத்தூர் மாவட்ட தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த சுவிகி, சொமாட்டோ, அமேசான், பிளிப்கார்டு தொழிலாளர்கள் புதியதாக இ-ஸ்கூட்டர் வாங்க 20,000 மானியம் பெற இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News September 13, 2025
திருப்பத்தூர்: கடன் தொல்லையா? இங்க போங்க!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அமைந்துள்ளது ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில். கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு அருள்பாலிக்கும் பெருமாளை சனிக்கிழமைகளில் மனமுருகி வழிபட்டால், கடன் தொல்லை நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பண கஷ்டத்திலும், கடனிலும் வாடும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News September 13, 2025
திருப்பத்தூர்: ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவரா நீங்கள்?

நாளுக்கு நாள் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வருகிறது. சில சமயம் ஆன்லைனில் வாங்கும் பொருட்கள் சேதமடைந்த நிலையில் நம்மிடம் வந்து சேருகிறது. இதனை உரிய நிறுவனங்கள் மாற்ற மறுத்தாலோ (அ) பணத்தை திரும்ப தர மறுத்தாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் மாற்ற (அ) பணத்தை பெற உரிமை உண்டு. மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். SHARE
News September 13, 2025
திருப்பத்தூரில் கேஸ் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு…

திருப்பத்தூர் மக்களே, நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் டெலிவரி ஆக தாமதம் ஆகுதா? இனி கவலை வேண்டாம். நாம் கேஸ் சிலிண்டர் புக் செய்தால், அடுத்த 48 மணிநேரத்திற்குள் டெலிவரி செய்யவேண்டும் என்பது விதி. ஆனால், பலர் ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குப் பிறகு கூட அதைப் பெறுகிறார்கள். அவசர காலத்தில் இப்படி இழுத்தடித்தால் இந்த நம்பரில் (1906, 1800-2333-555) புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!