News September 13, 2025
சேலத்தில் லிப்ட் கேட்டு வந்த பெண் பலி

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே நடந்த சாலை விபத்தில் கடலூரைச் சேர்ந்த சாந்தி (50) என்ற பெண் உயிரிழந்தார். சிறுவாச்சூரிலிருந்து தலைவாசல் நோக்கி ‘லிப்ட்’ கேட்டு பைக்கில் சென்றபோது, பட்டுத்துறை அருகே கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதன் பின் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தலைவாசல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 13, 2025
சேலத்தில் தொழில் தொடங்க ஆசையா? இதை பண்ணுங்க!

படித்த மற்றும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு சுயமாக தொழில் தொடங்க UYEGP திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் முதல் ரூ.15 லட்சம்வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றல் நீங்கள் வாங்கும் கடனில் அதிக பட்சம் ரூ.3.50 லட்சம் வரை அரசே மானியமாக செலுத்திவிடுகிறது. மேலும், கடன் தொகையை திரும்ப செலுத்த 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.விண்ணபிக்க <
News September 13, 2025
சேலம்: அரசு வேலை பெற அரிய வாய்ப்பு APPLY NOW!

சேலம் மக்களே தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் பல்வேறு Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ 40,000 முதல் ரூ.1,50,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 25.09.2025 தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். <
News September 13, 2025
தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் சேலம் மாணவர்கள்!

சேலம் சென்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் ரோகித், அஜய் ஆகிய இருவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்நாடு கால்பந்து அணியில் இடம் பிடித்து ஸ்ரீ நகரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ளனர். மாணவர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.