News September 13, 2025
தென்காசி: செயின் பறிப்பில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி

நெல்கட்டும்செவல் கிராமத்தைச் சேர்ந்த பாப்பம்மாள்(80) என்பவர் நேற்று தனது வீட்டு வாசலில் அமர்ந்து இருந்தபோது அவ்வழியாக பைக்கில் வந்த ஒருவர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து புகார் வந்த நிலையில் புளியங்குடி காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட சங்கரன்கோவிலைச் சேர்ந்த மதிவர்ணம்(34) என்ற நபரை கைது செய்தனர். இவர் ME(C.S) படித்தவர் ஆவார்.
Similar News
News September 13, 2025
தென்காசி: குளத்தில் இருந்து எடுக்கபடும் தண்ணீர்

தென்காசி, குத்துக்கல்வலசை ஊராட்சி அடவிநயினார் அணை நீர்ப்பாசனத்திற்குட்பட்ட பொதுபணித்துறைக்கு சொந்தமான நெடுங்குளத்தில் 10க்கும் மேற்பட்ட தண்ணீர் டேங்கர் மூலம் வணிக பயன்பாட்டுக்குக்காக எடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிப்பதாக சொல்லபடுகிறது. நிலத்தடி நீர் சீக்கிரம் வரண்டு விவசாய பயிர்களை காப்பாற்ற முடியாத சூழல் என விவசாயிகளின் வேதனை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 13, 2025
தென்காசி: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி!

தென்காசி மக்களே செப்.13ம் தேதி இன்று முதல் தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கு <
News September 13, 2025
தென்காசி: “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் ஆட்சியர் ஆய்வு

தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சி, சிந்தாமணியில் நேற்று நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், புளியங்குடி நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் ஆய்வு மேற்க்கொண்டார்.