News September 13, 2025

கோவை: SMS மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

image

கோவை மாவட்ட காவல்துறை முகநூல் மூலம் போலி SMS மோசடி குறித்து எச்சரிக்கை புகைப்படம் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதில் SBI, SMS-ல் இணைப்புகள் அனுப்பாது. போலி இணைப்புகளை கிளிக் செய்ய தவிர்க்கவும். மேலும் மோசடி புகாருக்கு 1930 சைபர் கிரைம் மற்றும் 18001234/18002100 ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Similar News

News September 13, 2025

கோவை அருகே ஆண் சடலம் மீட்பு!

image

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கிழக்கு லோகமான்யா தெருவில் உள்ள சிட்டி பிளைவுட் கடையின் முன்பு நேற்று அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் ரத்தக்கறையுடன் இறந்த நிலையில் கிடந்தார். இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் அவர் வேலூரை சேர்ந்த சீனிவாசன்(65) என்பது தெரிய வந்துள்ளது.இதனை தொடர்ந்து முதியவர் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

News September 13, 2025

கோவையில் தொழில் தொடங்க ஆசையா? இதை பண்ணுங்க!

image

படித்த மற்றும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு சுயமாக தொழில் தொடங்க UYEGP திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் முதல் ரூ.15 லட்சம்வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றல் நீங்கள் வாங்கும் கடனில் அதிக பட்சம் ரூ.3.50 லட்சம் வரை அரசே மானியமாக செலுத்திவிடுகிறது. மேலும், கடன் தொகையை திரும்ப செலுத்த 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. விண்ணபிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும்.SHARE பண்ணுங்க

News September 13, 2025

கோவை: அரசு வேலை பெற அரிய வாய்ப்பு APPLY NOW!

image

கோவை மக்களே தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் பல்வேறு Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ 40,000 முதல் ரூ.1,50,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 25.09.2025 தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். <>இங்கே கிளிக்<<>> செய்து மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றி அறியலாம்.! SHARE பண்ணுங்க

error: Content is protected !!