News September 13, 2025

கிருஷ்ணகிரியில் தீபாவளி பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளிக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். ஊராட்சி வரி ரசீது, கட்டட வரைபடம், கட்டட வரி ரசீது, ஒப்பந்த பத்திரம் மற்றும் ₹600 செலுத்தியதற்கான வங்கி சலான் ஆகியவை வேண்டும். கல் அல்லது தார்சு கட்டிடங்களில் மட்டுமே கடைகள் அமைக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். ஷேர்

Similar News

News September 13, 2025

கிருஷ்ணகிரிக்கு மீண்டும் முதல்வர் வருகை

image

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வரும் செப்டம்பர் 14 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். கிருஷ்ணகிரி, சூளகிரி, வேப்பனபள்ளி, பர்கூர் மற்றும் காவேரிப்பட்டிணம் ஆகிய பகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் மற்றும் ரோடு ஷோக்களில் பங்கேற்கிறார். ‘கிருஷ்ணகிரியின் தொன்மையும் வரலாறும்’ என்ற புத்தகத்தையும் அவர் வெளியிடுகிறார். அவரது வருகையையொட்டி பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News September 13, 2025

கிருஷ்ணகிரி: பொருளை மாற்ற மறுத்தால் புகார் அளிக்கலாம்

image

கடைகளில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்ற மறுத்தாலோ அல்லது பணத்தைத் திரும்பத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற (அ) பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடமும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் புகார் அளிக்கலாம். SHARE IT

News September 13, 2025

கிருஷ்ணகிரி: சிசிடிவி பொருத்த, பழுது நீக்க இலவச பயிற்சி

image

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு, CCTV கேமரா பொருத்துதல் மற்றும் பழுது நீக்குவதற்கான 13 நாள் இலவசப் பயிற்சியை வழங்குகிறது. இந்தப் பயிற்சிக்கு 8ஆம் வகுப்பு படித்த, 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.. மேலும் தகவல்களுக்கு, 94422 47921, 90806 76557 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.ஷேர்

error: Content is protected !!