News September 13, 2025
FIRST LOVE: மறக்க முடியாமல் தவிக்கும் ஆண்கள்

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பெரும்பாலானோர் இன்னமும் தங்கள் முதல் காதலை நினைத்துக் கொண்டிருப்பதாகவும், 10-ல் 4 பேர், சமூக வலைதளங்கள் உதவியுடன் மீண்டும் முதல் காதலோடு தொடர்புகொண்டு (அ) இணைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற 10-ல் 4 பேரில் குறிப்பாக ஆண்கள் இன்னும் பழைய காதல் நினைவுகளை சுமப்பதாகவும் பதிலளித்துள்ளனர். உங்களுக்கு எப்படி?
Similar News
News September 13, 2025
ரயிலில் சீட் பிடித்தால் குற்றம்: இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க

ரயில் பெட்டிகள் மீது கற்களை வீசுவது உள்பட பல்வேறு குற்றச் செயல்கள் தற்போது ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அதேபோல், சென்னை மின்சார ரயில்களில் சீட் பிடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில், சில முக்கிய எச்சரிக்கைகளை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதை மேலே உள்ள படங்களில் Swipe செய்து பாருங்கள். உங்கள் ரயில் பயணத்தில் ஏற்பட்ட சிரமத்தை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News September 13, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

தங்கம் விலை இன்று(செப்.13) சவரனுக்கு ₹160 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹10,220-க்கும், சவரன் ₹81,760-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை இந்த வாரத்தில் மட்டும் சவரனுக்கு ₹2,160 உயர்ந்த நிலையில், ₹160 மட்டுமே குறைந்துள்ளது. வெள்ளி இன்று கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹143-க்கு விற்பனையாகிறது. நாளை (ஞாயிறு) தங்கம் விலையில் மாற்றம் இருக்காது என்பதால் 2 நாள்களுக்கு இதே விலை நீடிக்கும்.
News September 13, 2025
NDA கூட்டணி ஆட்சியே நோக்கம்: நயினார்

NDA கூட்டணி ஆட்சிதான் தங்களது நோக்கம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த அதிமுக என்பது அவர்களின் உள்கட்சி விவகாரம் என்ற அவர், TTV, OPS ஆகியோர் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்தவர்கள் தான் என குறிப்பிட்டுள்ளார். அதிமுக பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டு டெல்லி சென்று திரும்பிய நிலையில், நயினாரின் இந்த பேச்சு பேசுபொருளாகியுள்ளது. மீண்டும் ஒன்றிணையுமா NDA கூட்டணி?