News September 13, 2025
தனியார் மருத்துவ கல்லூரிகள் மீது ராமதாஸ் குற்றச்சாட்டு

தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டண வசூலை தமிழக அரசு தடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என மருத்துவக் கல்வி இயக்குநரகம் எச்சரித்தும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ₹5 முதல் ₹15 லட்சம் வரை கூடுதலாக தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்கள் வசூலிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் மாணவர்கள் கல்வியை தொடர்வதில் சிக்கல் ஏற்படுவதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
Similar News
News September 13, 2025
PM மோடி இன்று மணிப்பூர் பயணம்

PM மோடி இன்று மணிப்பூர் செல்கிறார். அங்கு அவர் ₹7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ₹1,200 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கியும் வைக்கிறார். இனக்கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு PM முதல் முறையாக மணிப்பூர் செல்வது குறிப்பிடத்தக்கது. PM வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
News September 13, 2025
தேர்தல் செலவு: திமுக ₹170 கோடி, அதிமுக ₹5.7 கோடி

நாடாளுமன்ற தேர்தலில் பிராந்திய கட்சிகள் செலவழித்த தொகை விவரத்தை ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ளது. * 2024 தேர்தலில் திமுக ₹170 கோடி செலவு செய்துள்ளது. * எதிர்க்கட்சியான அதிமுக ₹5.7 கோடி செலவு செய்துள்ளது. * தெலுங்கானா பிஆர்எஸ் கட்சி ₹197 கோடி செலவு செய்து முதலிடத்தில் உள்ளது. * 2023-24 நிதியாண்டில் திமுகவின் மொத்த வருமானம் ₹180 கோடி ஆகும். * அதிமுகவின் வருமானம் ₹46 கோடி ஆகும்.
News September 13, 2025
அடுத்தக்கட்ட நடவடிக்கை? செங்கோட்டையன் பதில்

தனது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் டெல்லி சென்று திரும்பிய நிலையில், அவரது அடுத்தக்கட்ட நகர்வை எல்லோரும் உற்று நோக்குகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லோரும் நினைப்பது போல நல்லதையே நினைத்து நல்லதே செய்வோம் என்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.