News September 13, 2025
ஆசிய கோப்பையில் இன்று Ban Vs SL

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று குரூப் பி-ல் இடம்பெற்றுள்ள வங்கதேசம் – இலங்கை அணிகள் மோதுகின்றன. பேட்டிங், பவுலிங் இரண்டிலும் இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளதால், களத்தில் யுக்திகளை சரியாக செயல்படுத்தும் அணியே வெற்றி பெறும். ஏற்கெனவே ஹாங்காங்கை வீழ்த்திய வங்கதேசம், இப்போட்டியில் வென்றால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதியாகி விடும். Head to Head = 20 போட்டிகள், வெற்றி = SL 12, Ban 8.
Similar News
News September 13, 2025
PM மோடி இன்று மணிப்பூர் பயணம்

PM மோடி இன்று மணிப்பூர் செல்கிறார். அங்கு அவர் ₹7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ₹1,200 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கியும் வைக்கிறார். இனக்கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு PM முதல் முறையாக மணிப்பூர் செல்வது குறிப்பிடத்தக்கது. PM வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
News September 13, 2025
தேர்தல் செலவு: திமுக ₹170 கோடி, அதிமுக ₹5.7 கோடி

நாடாளுமன்ற தேர்தலில் பிராந்திய கட்சிகள் செலவழித்த தொகை விவரத்தை ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ளது. * 2024 தேர்தலில் திமுக ₹170 கோடி செலவு செய்துள்ளது. * எதிர்க்கட்சியான அதிமுக ₹5.7 கோடி செலவு செய்துள்ளது. * தெலுங்கானா பிஆர்எஸ் கட்சி ₹197 கோடி செலவு செய்து முதலிடத்தில் உள்ளது. * 2023-24 நிதியாண்டில் திமுகவின் மொத்த வருமானம் ₹180 கோடி ஆகும். * அதிமுகவின் வருமானம் ₹46 கோடி ஆகும்.
News September 13, 2025
அடுத்தக்கட்ட நடவடிக்கை? செங்கோட்டையன் பதில்

தனது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் டெல்லி சென்று திரும்பிய நிலையில், அவரது அடுத்தக்கட்ட நகர்வை எல்லோரும் உற்று நோக்குகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லோரும் நினைப்பது போல நல்லதையே நினைத்து நல்லதே செய்வோம் என்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.