News September 13, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்புகொள்வதற்கான உதவிப் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் tonight ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல் அதிகாரிகளின் விபரங்கள் உட்பட தேவையான தகவல்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது.
Similar News
News September 13, 2025
திண்டுக்கல்லில் துடிதுடித்து பலி!

திண்டுக்கல்: கள்ளிமந்தையம், கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன்(68), நேற்று(செப்.12) காலை கரியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவரை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு கீரனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, மணல்மேடு பகுதியில் சுவாமிநாதன் என்பவர் ஓட்டி வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட செல்லப்பன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News September 13, 2025
திண்டுக்கல்: ரேஷன் கார்டில் பிரச்னையா..? இங்க போங்க!

திண்டுக்கல் மாவட்ட அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று(செப்.13) ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, செல்போன் எண் பதிவு என அனைத்து ரேஷன் கார்டு சார்ந்த சேவைகளுக்கும் மனு அளிக்கலாம். மேலும், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், பொருட்கள் தரம் குறித்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!
News September 12, 2025
திண்டுக்கல்: பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்!

திண்டுக்கல்: வேடசந்தூரைச் சேர்ந்த கார்த்திக் ஓராண்டிற்கு முன்பாக கன்னியாகுமரி, கருங்கல் அருகே பாலூர் காட்டுவிளை என்ற பகுதியை சேர்ந்த ஜெய அன்னாள்(20) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். கடந்த 40 நாட்களுக்கு முன்பாக குழந்தை பிறந்ததிலிருந்தே கணவர் தன்னுடன் பேசுவதில்லை என்பதற்காக குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து கொலை செய்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.