News September 13, 2025

கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம்!

image

கோவை மாவட்ட நீதிமன்றத் துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று (செப். 13) துவங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். நிகழ்வு, நாளை சனிக்கிழமை காலை 9.30 மணியளவில், கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா இந்த நிகழ்வை துவங்கி வைக்க உள்ளார்.

Similar News

News September 13, 2025

கோவை: நெல்லிக்காயை பணமாக்கும் பயிற்சி!

image

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி (16.09.2025 மற்றும் 17.09.2025) ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற உள்ளது. இதில் நெல்லி பானங்கள், தயார் நிலை பானம், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி கேண்டி கற்பிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 94885-18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

News September 12, 2025

கோவை : இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (12.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 12, 2025

கோவை தங்க கொள்ளை வழக்கில் மேலும் இருவர் கைது!

image

கோவை அருகே ரூ.1.25 கோடி தங்கம் கொள்ளை வழக்கில் போலீசார் மேலும் இருவரை வாளையார் சோதனைச் சாவடியில் கைது செய்தனர். பாலக்காட்டை சேர்ந்த சதாம் உசேன், கொல்லத்தை சேர்ந்த ரோஷன் என்போர் தங்கம் கொள்ளையில் தொடர்புடையவர்கள் என உறுதி செய்யப்பட்டது. மேலும், இதுவரை கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 8 என போலீசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!