News September 13, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (செப்.13) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 13, 2025

கடலூர்: ரூ.47 லட்சம் மோசடி செய்தவர் கைது

image

நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டீஸ்வரம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் சக்திவேல் (63). இவர் அதே பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரிடம் கடந்த ஆண்டு தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறி ரூ.47 லட்சம் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர்களுக்கு தீபாவளி சீட்டு கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். இது குறித்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து சக்திவேலை நேற்று கைது செய்தனர்.

News September 13, 2025

கடலூர்: ரூ.3 லட்சம் சம்பளத்தில் ஜெர்மனியில் வேலை

image

ஜெர்மனி நாட்டில் வேலைவாய்ப்பை பெறும் வகையில், ஜெர்மன் மொழி தேர்விற்கான இலவச பயிற்சி தாட்கோ சார்பில் அளிக்கப்படுகிறது. இதற்கு Nursing / B.E / B.Tech முடித்த, 35 வயதுக்கு உட்பட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வகுப்புகளை சேர்ந்த நபர்கள், <>இங்கே<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பிறகு மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பளத்தில் பணி வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News September 13, 2025

கடலூர்: லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ; பறிபோன வேலை

image

குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் எஸ்.ஐ.ஆக பணிபுரிந்தவர் பாலசுந்தரம். இவர் கடந்த 7.3.2023 அன்று குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஐயப்பன் என்பவரிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் மீது நடத்தப்பட்ட துறை ரீதியிலான விசாரணையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நேற்று அவரை பணிநீக்கம் செய்து கடலூர் எஸ்.பி உத்தரவிட்டார்.

error: Content is protected !!