News September 13, 2025
நாகை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் தேவைக்கேற்ப செப்டம்பர் 15 முதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் நெல் மூட்டைகளை விற்பனை செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News September 13, 2025
நாகை விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையில் குறைந்த வாடகையில் நெல் அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை தவிர அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்த வாடகையில், 4456 தனியார் அறுவடை எந்திரங்களின் விவரங்கள் உழவர் செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் உழவர் செயலி மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்
News September 13, 2025
நாகை மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் பார்வைக் கோர் பயணம் என்ற கண் தான விழிப்புணர்வு பேரணி இன்று நடைப்பெற்றது. இதில், நாகப்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு தெரிவித்து சால்வை அணிவிக்கப்பட்டது.
News September 12, 2025
TNPSC தேர்வுகளுக்கு நாளை பயிற்சி

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் TNPSC நடத்தும் குரூப் 1 மற்றும் குரூப் 4, தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு குழுமம் நடத்தும் உதவி ஆய்வாளர்கள் தேர்வுகளுக்கு, தன்னார்வல பயிலும் வட்டம் மூலம் இலவச பயிற்சி வகுப்பு நாளை13ந் தேதி சனிக்கிழமை மதியம் 2.30 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் தேர்வர் பங்கேற்று பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.