News September 13, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.13) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 13, 2025
தர்மபுரியில் 3 லட்சம் ஆண்டு பழமையான கருவிகள் கண்டெடுப்பு

தர்மபுரி மாவட்டம், குட்லாம்பட்டி கிராமத்தில் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய கள ஆய்வில், 3 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய கற்கால மற்றும் 5,000 ஆண்டுகள் பழமையான நுண் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய 200க்கும் மேற்பட்ட கற் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது இப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. இதில், கைக்கோடரிகள், வெட்டுக் கருவிகள், சுரண்டும் கருவிகள் போன்றவை அடங்கும்.
News September 12, 2025
தர்மபுரி: தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியம்

தொழில் தொடங்க அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கி வருகிறது. இதில் ரூ.75 லட்சம் திரும்ப செலுத்த தேவையில்லை(25%மானியம்). தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணபிக்க வேண்டும். பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% மற்றும் பிற பிரிவினர் 5% செலுத்த வேண்டும். 21-35 வயதிற்குட்பட்டவர்கள் இந்த <
News September 12, 2025
தருமபுரி: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா?

தருமபுரி மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் போன்ற திருத்தங்கள் செய்ய நாளை (செப்.13) அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், கலந்து கொண்டு பயன்பெறலாம். (SHARE)