News September 13, 2025
ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்க கூட்ட அரங்கில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகங்களிலும், நடைபெற்று வரும் பணிகள் குறித்தான, ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், வேளாண்மை இயக்குனர் திறன் மேம்பாட்டு கழகம், கிராந்தி குமார், மற்றும் மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் இன்று 1நடைபெற்றது.
Similar News
News September 13, 2025
அனகாபுத்தூர்: கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் செல்வம் (53). இந்து பாரத முன்னணி மாநில தலைவராக உள்ளார். இவர் பல்லாவரத்தில் இருந்து நிர்வாகிகளுடன் தனது காரில் அனகாபுத்தூர் நோக்கி சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் காரை வழிமறித்து தாக்க முயன்றதாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை செய்து அனகாபுத்தூரைச் சேர்ந்த பாலாஜி, சதாம் உசேன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
News September 13, 2025
செங்கல்பட்டு: ரேஷன் கார்டு இருக்கா? சூப்பர் தகவல்

செங்கல்பட்டு மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
News September 13, 2025
தாம்பரம்: உங்க வீட்டில் செல்லப்பிராணி இருக்கா?

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் தங்களது செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்திய விபரம் (ம) கால்நடை மருத்துவரின் விபரங்களை, tcmcpublichealth.inPetAnimalRegister என்ற இணையதளத்தில், அவற்றின் உரிமையாளர்கள் பதிவேற்றம் செய்து, உரிமச் சான்றிதழை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள மாநகராட்சி தெரிவித்துள்ளது. வழங்கப்பட்ட தேதியிலிருந்து, ஓராண்டு காலத்திற்கு உரிமச் சான்றிதழ் செல்லுபடியாகும்.