News September 12, 2025

ASIA CUP: ஓமனிடம் திணறிய பாக்., பேட்ஸ்மென்கள்

image

ஆசிய கோப்பையில் ஓமனுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முகமது ஹாரிஸ் அதிரடியாக விளையாடி 66 ரன்கள் குவிக்க, மற்ற வீரர்களோ ஓமன் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். 20 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்களை இழந்து பாக்., 160 ரன்கள் எடுத்தது. ஓமன் தரப்பில் ஷா பைசல், அமிர் கலீம் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

Similar News

News September 13, 2025

அறிஞர் அண்ணா பொன்மொழிகள்

image

*உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன்; வாழ்த்துகுரியவன் ; அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுத்துவது சமுதாயத்தின் நல்வாழ்வையே புரையேறச் செய்வதாகும். *விதியை நம்பி, மதியை பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிக கேடு. *சமத்துவம், சமதர்மம் போன்ற லட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம். *கண்டனத்தை தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது.

News September 13, 2025

“புதிய காரை தவெக கொடுத்திட்டாங்க”

image

தவெக மாநாட்டில் கொடிக்கம்பம் விழுந்து உடைந்த தன்னுடைய காருக்கு மாற்று கார் வழங்கப்பட்டதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். தவெக தலைமை சொன்னபடி புதிய கார் கொடுக்காததால் அதன் உரிமையாளர் தினேஷ்குமாரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின. இதை மறுத்துள்ள தினேஷ்குமார், கட்சி தரப்பில் தனக்கு புதிய கார் தந்துவிட்டதாகவும், அதை விஜய்யின் கையில் வாங்குவதற்காக காத்திருப்பதாகவும் கூறினார்.

News September 13, 2025

ஆட்டத்தை ஆரம்பித்த கமல்ஹாசன்

image

கமல்ஹாசனின் அடுத்த படத்தில் மலையாள கதை எழுத்தாளர் ஷியாம் புஷ்கரன் இணைந்துள்ளார். ‘தக் லைஃப்’ படத்திற்கு பிறகு அன்பு அறிவு இயக்கத்தில் கமல் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏனோ படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது. இந்த நிலையில் கும்பலாங்கி நைட்ஸ், மகிஷிண்டே பிரதிகாரம் படங்களின் எழுத்தாளர் ஷியாம் புஷ்கரன் இப்படத்தில் பணியாற்றவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகிறது.

error: Content is protected !!