News April 11, 2024
பழனியில் ரமலான் கொண்டாட்டம்

பழனி அடுத்த ஆயக்குடியில் காயிதே மில்லத் சிறுபான்மையினர் சமூக நல அறக்கட்டளை சார்பாக ரமலான் பண்டிகையை முன்னிட்டு நிர்வாக இயக்குனர் அஜ்மத் அலி தலைமையில் அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து அறக்கட்டளை சார்பாக பொதுமக்களுக்கு ரமலான் பண்டிகை முன்னிட்டு பிரியாணி வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் காயிதே மில்லத் அறக்கட்டளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Similar News
News December 7, 2025
திண்டுக்கல்: வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

திண்டுக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அலுவலக நேரங்களில் அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!
News December 7, 2025
திண்டுக்கல்: மீன்பிடி குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குதிரையாறு நீர்த்தேக்கத்தில் மீன்பிடி உரிமையை 5 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்க ஒப்பந்தப்புள்ளிகள் 25.11.2025 முதல் 10.12.2025 வரை, முற்பகல் 9 மணி வரை வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்த ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.tntenders.gov.in இணையதளத்தில் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
திண்டுக்கல்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

திண்டுக்கல் மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை SHARE பண்ணுங்க.


