News September 12, 2025
நேபாளில் சிக்கிய இந்தியர்கள் என்ன ஆனார்கள்?

நேபாளில் சிக்கி தவித்த 140 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும், பல இந்தியர்கள் எல்லை வழியாக நாட்டிற்குள் வந்துள்ளனர். அதேபோல், அந்நாட்டில் சிக்கித் தவித்த இந்திய வாலிபால் அணி, இந்திய தூதரகத்தால் மீட்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியர்கள் யாரேனும் சிக்கியிருந்தால், அவர்களையும் பத்திரமாக மீட்டுக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.
Similar News
News September 13, 2025
நடிகை திஷா பதானி வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு

பாலிவுட் நடிகை திஷா பதானியின் இல்லத்துக்கு முன், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோல்டி பிரார் என்ற குழு இதற்கு பொறுப்பேற்று சோஷியல் மீடியாவில் ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளது. அதில் திஷா துறவிகள் மற்றும் சனாதன தர்மத்தை அவமதித்துவிட்டதாக கூறியுள்ளனர். இனிமேல் யாரும் இந்து மதத்தை அவமதிக்க கூடாது என்பதற்காக இந்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
News September 13, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 13, ஆவணி 28 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சப்தமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை
News September 13, 2025
தனியார் மருத்துவ கல்லூரிகள் மீது ராமதாஸ் குற்றச்சாட்டு

தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டண வசூலை தமிழக அரசு தடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என மருத்துவக் கல்வி இயக்குநரகம் எச்சரித்தும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ₹5 முதல் ₹15 லட்சம் வரை கூடுதலாக தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்கள் வசூலிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் மாணவர்கள் கல்வியை தொடர்வதில் சிக்கல் ஏற்படுவதாக ராமதாஸ் கூறியுள்ளார்.