News September 12, 2025

சேலம் வருகிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

image

சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் வரும் செப்.16- ஆம் தேதி நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் செப்.15- ஆம் தேதி சேலம் வருகிறார். விழாவில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அடையாள அட்டை மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

Similar News

News September 18, 2025

சேலம்: அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

image

சேலம், ஓமலூரில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 153 சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

News September 18, 2025

திமுகவின் இரட்டை நிலைப்பாடு-இபிஎஸ் விமர்சனம்

image

சேலம் ஓமலூரில் செய்தியாளர் சந்திப்பில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாட்டையும், ஆளுங்கட்சியாக மாறியதும் அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டையும் தி.மு.க கொண்டிருப்பதாகக் கூறினார். எதிர்க்கட்சியாக இருந்தபோது விமர்சித்தவர்களுக்கு இப்போது ரத்தினக் கம்பளம் விரிப்பதாகவும் அவர் சாடினார்.

News September 18, 2025

சேலம்: பயிற்சியுடன் ரூ.12,000 வேண்டுமா?

image

சேலம் மக்களே, எல்ஐசி வீட்டு நிதி நிறுவனத்தில் (LIC Housing Finance) தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.12,000 உதவித்தொகையுடன் 12 மாதங்களுக்கு அந்தந்த மாநில அலுவலகங்களிலேயே பயிற்சி அளிக்கப்படகிறது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 22.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!