News September 12, 2025

சென்னை மெட்ரோ வாட்ஸ்அப் டிக்கெட் சேவை பாதிப்பு

image

வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை மெட்ரோவின் வாட்ஸ்அப் சாட்பாட் சேவை தற்காலிகமாக இயங்கவில்லை. பயணிகள் CMRL மொபைல் செயலி, Paytm, PhonePe, Singara Chennai Card மற்றும் பயண அட்டைகள் மூலம் டிக்கெட்டுகளை பெறலாம். மேலும் தகவல் வரும் வரை கவுண்டர்களிலும் டிக்கெட் வழங்கப்படும் என CMRL அறிவித்துள்ளது.

Similar News

News September 13, 2025

கிண்டி தேசிய பூங்காவில் பரவும் பன்றி காய்ச்சல்

image

கிண்டி தேசிய பூங்கா இந்தியாவில் 8-வது சிறிய பூங்காவாகும். இப்பூங்காவிற்குள் தெருவில் திரியும் 12 பன்றிகள் இறந்து கிடந்தன. இதனையடுத்து கால்நடை பராமரிப்பு துறையினர், சில மாதிரிகளை போபாலில் உள்ள பாதுகாப்பு விலங்கு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில், ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவி இருப்பதாக தெரியவந்தது. பூங்கா வளாகத்தில் பன்றிகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

News September 13, 2025

சென்னையில் இன்று மின்தடை

image

சென்னையில் இன்று (செப்.13) பல்வேறு பகுதியில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், அடையாறு, எஸ்பிஐ காலனி, பெசன்ட் நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இன்று மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (ஷேர் பண்ணுங்க)

News September 13, 2025

அரும்பாக்கம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை

image

ஓட்டேரியை சேர்ந்த 31 வயது பெண், ரேபிடோ பைக் ஓட்டி வருகிறார். இவர் கோயம்பேடு முதல் அரும்பாக்கம் வரை வாடிக்கையாளரை அழைத்துச் செல்லும்போது, ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அரும்பாக்கத்தில் வாகனத்தை நிறுத்தி கேள்வி எழுப்பியபோது, பொதுமக்கள் வருவதை பார்த்து அவன் தப்பியதால், பெண் அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்பரை கைது செய்தனர்.

error: Content is protected !!