News September 12, 2025

தி.மலை: கோர்டில் கேஸ் நிலுவையில் இருக்கா?

image

தி.மலை மாவட்டதில் நாளை(13.09.2025) நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் லோக் அதலாத் நீதிமன்றம் நடைபெற உள்ளது. சாலை விபத்து, போக்குவரத்து அபராதம், மின் கட்டணம், நிலத்தகராறு, ஜீவனாம்சம், தொழிலாளர் நலன் இழப்பீடு, கல்விக்கடன், வங்கிக்கடன் வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள், செக் மோசடி, நுகர்வோர் போன்ற நிலுவையில் உள்ள சிறு வழக்குகளுக்கு இங்கு சென்று தீர்வு காணலாம்.

Similar News

News September 12, 2025

தி.மலை: உற்பத்தியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்

image

திருவண்ணாமலை மாநகராட்சி பெருங்குப்பை உற்பத்தியாளர்களுக்கான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் இன்று கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மண்டபத்தில், இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, துணை மேயர் ராஜாங்கம், திமுக நகரச் செயலாளர் கார்த்திக் வேல்மாறன், ஹோட்டல் உரிமையாளர்கள், வியாபார சங்கங்கள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News September 12, 2025

எம்பி., தரணிவேந்தன் திறந்து வைத்த கொள்முதல் நிலையம்!

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி கொவலை ஊராட்சியில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை (செப்.12) இன்று ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தரணிவேந்தன், எம்எல்ஏ அம்பேத்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் பொதுமக்கள் விவசாய பெரு மக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

News September 12, 2025

தி.மலை: தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியம்

image

தொழில் தொடங்க அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கி வருகிறது. இதில் ரூ.75 லட்சம் திரும்ப செலுத்த தேவையில்லை(25%மானியம்). தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணபிக்க வேண்டும்.பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் மற்றும் பிற பிரிவினர் 5 சதவீதம் செலுத்த வேண்டும். 21-35 வயதிற்குட்பட்டவர்கள் <>இந்த<<>> லிங்க்/மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணபிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!