News September 12, 2025
காஞ்சிபுரம்: தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியம்

தொழில் தொடங்க அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கி வருகிறது. இதில் ரூ.75 லட்சம் திரும்ப செலுத்த தேவையில்லை(25%மானியம்). தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணபிக்க வேண்டும்.பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் மற்றும் பிற பிரிவினர் 5 சதவீதம் செலுத்த வேண்டும். 21-35 வயதிற்குட்பட்டவர்கள் இந்த <
Similar News
News September 12, 2025
நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அவ்வகையில் காஞ்சிபுரம் ஒன்றியத்தில் AA திருமண மண்டபம், அடங்கார்குளம் கிராமம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் கட்டவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குன்றத்தூரில் அரசினர் மேல்நிலைப்பள்ளி, கொளப்பாக்கம்,
குன்றத்தூர் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அண்ணாநகர், பழந்தண்டலம் ஆகிய இடங்களில் நடைபெறும்.
News September 12, 2025
நாளை லோக் அதாலத் நிகழ்வு

நீதிமன்றங்களில் வழக்கு தேக்கநிலை தவிர்க்க வழக்கு தொடுக்கும் இரு நபர்களை சமரச தீர்வு மையம் மூலம் வெற்றி தோல்வி இன்றி இரு தரப்பினரும் பயனடையும் வகையில் லோக் அதாலத் செயல்பட்டு வருகிறது. அவ்வகையில் நாளை 9.45 முதல் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் நிகழ்வு நடைபெற உள்ளதாக சமரச தீர்வு மைய நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து வழக்காளிகள் பயன்பெறலாம்.
News September 12, 2025
பள்ளி மாணவர்களுக்கு கல்லூரி களப்பயணம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளி மாணவ மாணவிகளை பேருந்து மூலம் கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லும் களப்பயணத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்விமோகன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மூன்று பேருந்துகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறையை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.