News April 11, 2024
ஆன்லைன் விளம்பரத்திற்கு பாஜக இத்தனை கோடி செலவா?

கூகுள் மூலம் ஆன்லைனில் அளிக்கப்பட்ட 80,667 விளம்பரங்களுக்கு பாஜக ₹39.41 கோடி செலவிட்டுள்ளது. கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை அக்கட்சி அளித்த விளம்பரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் உத்தர பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தலா ₹2 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளதாகவும், குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மட்டும் ₹3.38 கோடி செலவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 22, 2026
பள்ளிகள் விடுமுறை.. நாளை முதல் சிறப்பு ரயில்கள்

<<18883212>>பள்ளிகள் தொடர் விடுமுறையையொட்டி<<>> தெற்கு ரயில்வே மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்கள் நெரிசலின்றி ஊருக்கு செல்ல ஏதுவாக, எழும்பூர் – குமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நாளை இரவு 11.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில் குமரிக்கு செல்கிறது. மறுமார்க்கத்தில் ஜன.26-ல் சிறப்பு ரயில் இயக்கப்படும். முன்பதிவு தொடங்கியுள்ளது. முந்துங்கள்!
News January 22, 2026
ஓபிஎஸ் NDA கூட்டணிக்கு வருவார்: அண்ணாமலை

தனது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், OPS தனிமரமாக நிற்கிறார். இந்நிலையில், பொறுமையின் உருவமாக இருக்கக்கூடிய OPS மீண்டும் NDA கூட்டணிக்கு வருவார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சத்திய சோதனை எல்லாம் கடந்து நிற்கக் கூடிய ஒரு தலைவர் OPS. அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை என்று சொல்வார்கள்; அதனால் அவர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
பாடகி ஜானகியின் மகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

தாய் இருக்கும்போதே மகன் இறப்பது பெரும் சோகம். தனது ஒரே மகனை பறிகொடுத்துவிட்டு பாடகி ஜானகி கண்ணீரில் மூழ்கியுள்ளார். நடிகரும், நடன கலைஞருமான <<18924063>>முரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு<<>> பாடகி சித்ரா உள்ளிட்ட திரை பிரபலங்கள் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மைசூரில் நடைபெற்றுவரும் அவரது இறுதிச் சடங்கில், கலந்து கொண்டு ஜானகிக்கு திரைப்பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். RIP


