News September 12, 2025
சிவகங்கை: அழகப்பா பல்கலையில் இலவச பயிற்சி

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் செப்டம்பர்-13, 14 ஆகிய நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 4:30 மணி வரை அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் ரூட்ஸ் அகாடமி இணைந்து நடத்தும் பறை பயிற்சி இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும். இதில் பறையடி, பறை இசை பயிற்சிகள் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ. வேலுச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News September 13, 2025
சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் கனத்திற்கு!

சிவகங்கை -பாலக்காடு சந்திப்பு இடையே UTS செயலியில் செல்வதற்கு முன்பதிவில்லா பயணச்சீட்டு இதற்கு முன்னர் கொடுக்காமல் இருந்தது. இந் நிலையில் காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை இருப்புபாதை பயணிகள் நலகூட்டமைப்பு சார்பாக வைத்த கோரிக்கையை ஏற்று இன்று முதல் சிவகங்கை – பாலக்காடு சந்திப்பு இடையே UTS செயலியில் செல்வதற்கு முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.
News September 13, 2025
சிவகங்கை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்தாய்வு

சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மா.சௌ.சங்கீதா தலைமையில், மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தலைமையில் வளர்ச்சி திட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் மக்கள் தேவைகள் தொடர்பாக அலுவலர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது. மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் திட்டங்கள் கள ஆய்வு செய்யப்பட்டு, திட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
News September 12, 2025
சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்.

சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்டம்பர் 12) இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, மானாமதுரை உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் அவசர தேவைக்கு பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை மூலம் காவல்துறையை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.