News April 11, 2024

கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகள் அவசரக்கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட மா சாகுபடி விவசாயிகள் அவசர கூட்டம் இன்று நடந்தது. மழை இல்லாததால் மா விளைச்சல் வெகுவாக பாதிப்படைந்துள்ளதால் ஏரி குளங்களிலுள்ள தண்ணீரை டிராக்டர் போன்ற வாகனங்களில் கொண்டு வந்து மா மரங்களுக்கு ஊற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மா மரங்கள் காய்ந்து போனதால் அதற்கேற்றபடி ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Similar News

News December 31, 2025

கிருஷ்ணகிரி: சாலையில் இளைஞர் துடி துடித்து மரணம்!

image

பெரியகுத்தி அருகே நாகமலை கிராமத்தில் வசித்து வரும் முருகன் என்ற இளைஞர் நேற்று (டிச – 30) மாலை 7 மணிக்கு தங்கைக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தங்கையை மருத்துவமனையில் விட்டு விட்டு நாகமலைக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது சின்னகுத்தி அருகே சாலையில் எதிரே வந்த பிக்கப் வாகனத்தில் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.

News December 31, 2025

கிருஷ்ணகிரி: முதியவர் தவறி விழுந்து பரிதாப பலி!

image

ஓசூர் மூக்கணடப்பள்ளி அரசனட்டி பாரதி நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (60). கூலித் தொழிலாளி. இவர் மத்திகிரி அருகே உள்ளிவீரனப்பள்ளியில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கட்டிடத்தின் முதலாவது தளத்திலிருந்த அவர் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சரவணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சரவணன் பரிதாபமாக இறந்தார்.

News December 31, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (டிச-30) இரவு 10 மணி முதல் இன்று (டிச.31) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!