News April 11, 2024
சந்திரசேகர ராவின் மகள் கவிதா சிபிஐயால் கைது

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி திகார் சிறையில் இருக்கிறார். இந்நிலையில், இதே வழக்கில் தற்போது அவரை கைது செய்துள்ள சிபிஐ, காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
Similar News
News January 20, 2026
கிரீன்லாந்தில் அமெரிக்க கொடியை நாட்டிய டிரம்ப்

கிரீன்லாந்தில் US தேசிய கொடியை ஏந்தி நிற்பதுபோல், AI படத்தை டிரம்ப் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் கிரீன்லாந்து, வெனிசுலா, கனடா நாடுகளை US-ன் ஒருபகுதியாக காட்டும் AI படத்தையும் வெளியிட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை கைப்பற்றும் டிரம்ப்பின் முயற்சியால், ஏற்கெனவே US-EURO இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டிரம்ப்பின் AI படங்கள் மோதல் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
News January 20, 2026
PM மோடி மீதும் வழக்கு: ராமதாஸ் தரப்பு

பாமகவின் பெயர், சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை கோரி சென்னை HC-ல் ராமதாஸ் தரப்பில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி பேசிய ராமதாஸ் தரப்பு வக்கீல், ஜன.23-ல் TN வரும் PM மோடி, கூட்டணி குறித்து அன்புமணியிடம் பேசினால் அவர் மீதும் வழக்கு தொடர்வோம் எனக் கூறினார். மேலும், அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி அமைத்தது சட்டவிரோதம் என்ற அவர், பாமகவின் தலைவர் ராமதாஸ் மட்டுமே எனக் கூறினார்.
News January 20, 2026
தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் விலை ₹22,000 மாறியது

<<18907207>>தங்கம் விலை<<>> மளமளவென உயர்ந்துவரும் சூழலில், வெள்ளி விலை ராக்கெட் வேகத்தில் எகிறுகிறது. அந்த வகையில், இன்று ஒரேநாளில் வெள்ளி விலை ₹22,000 அதிகரித்துள்ளது. தற்போது 1 கிராம் வெள்ளி ₹340-க்கும், 1 கிலோ வெள்ளி ₹3.40 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இம்மாதத்தில் (ஜனவரி) 20 நாள்களில் மட்டும் 1 கிலோ வெள்ளி ₹84,000 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


