News September 12, 2025
அரசின் அடுத்த தீபாவளி பரிசு

EPFO 3.0 குறித்த கூட்டம், அக்டோபர் 2-வது வாரத்தில் நடைபெறவுள்ளது. இதில், PF Advance பெறுவது உள்பட முக்கிய மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாம். குறிப்பாக, PF பணத்தை ATM-ல் எடுக்கும் நடைமுறை அமலாக்கப்படுவது குறித்து முடிவெடுக்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு தீபாவளிக்கு முன்பே வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே PM மோடியின் தீபாவளி பரிசில் இதுவும் ஒன்று என கூறப்படுகிறது.
Similar News
News September 12, 2025
முகூர்த்த நாள், விடுமுறை.. 3 நாள் ஸ்பெஷல் அறிவிப்பு

வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு பொதுமக்கள் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, இன்று முதல் 980 ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று, நாளை, ஞாயிறு நாள்களில் சென்னையில் இருந்தும், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் புக் பண்ணலாம். SHARE IT.
News September 12, 2025
நேபாளில் சிக்கிய இந்தியர்கள் என்ன ஆனார்கள்?

நேபாளில் சிக்கி தவித்த 140 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும், பல இந்தியர்கள் எல்லை வழியாக நாட்டிற்குள் வந்துள்ளனர். அதேபோல், அந்நாட்டில் சிக்கித் தவித்த இந்திய வாலிபால் அணி, இந்திய தூதரகத்தால் மீட்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியர்கள் யாரேனும் சிக்கியிருந்தால், அவர்களையும் பத்திரமாக மீட்டுக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.
News September 12, 2025
கேபிள் நிறுவனத்தில் ₹300 கோடி ஊழல்: EPS

திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்துள்ளதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் திமுக எடுக்கவில்லை என்றும் விமர்சித்துள்ளார். மேலும், அரசு கேபிள் நிறுவனத்தில் சுமார் ₹300 கோடி அளவுக்கு திமுக அரசு ஊழல் செய்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.