News April 11, 2024

சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை

image

பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை என்று ஐஜேகே கட்சி நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் தொகுதியில் பாஜக சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் அவர், பல இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அரசியலுக்கு பணம் சம்பாதிக்க வரவில்லை, சேவை செய்யவே வந்திருக்கிறேன் என்றார். ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Similar News

News February 8, 2026

நடிகர் சுனில் காலமானார்.. பிரியங்கா வேதனை

image

<<19075789>>நடிகர் சுனில் தாபா<<>> மறைவுக்கு பிரியங்கா சோப்ரா உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘எப்போதுமே நீங்கள் தான் எனது கோச். நான் எனது தந்தையை இழந்தபோது நீங்கள் உறுதுணையாக இருந்தீர்கள். என் கடினமான காலத்தில் நிறைய உதவிகளை செய்திருக்கிறீர்கள்’ எனத் தெரிவித்துள்ளார். ‘மேரி கோம்’ படத்தில் பிரியங்கா சோப்ராவின் கோச் கேரக்டரில் சுனில் தாபா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News February 7, 2026

ஓபிஎஸ் எங்களுடன் தான் இருக்கிறார்: அண்ணாமலை

image

OPS இதுவரை எந்த கூட்டணியிலும் இணையாததால் அவரின் அரசியல் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் OPS தனித்து விடப்படவில்லை, எங்களுடன்தான் இருக்கிறார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுகவின் வெற்றியை கெடுக்கும் வகையில் OPS நடந்துகொள்ள மாட்டார் என <<19074873>>TTV தினகரனும்<<>> தெரிவித்திருந்தார். இதனால் NDA கூட்டணியில் OPS மீண்டும் இணைவார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

News February 7, 2026

விஜய்யால் அனைத்து கட்சிகளுக்கும் ஆபத்து: வாசன்

image

விஜய்யின் வாக்கு சதவீதத்தை 10-க்கும் குறைவாக இருக்குமென்று யாரும் கூறியதாக தெரியவில்லை; எனினும் அதனை உறுதிப்படுத்துபவர்கள் வாக்காளர்களே என ஜி.கேவாசன் பேசியுள்ளார். மதுரையில் பேசிய அவர், விஜய்யின் அரசியல் வருகையால் அனைத்து கட்சிக்கும் ஆபத்து என்றார். அவர் எத்தனை சதவீத வாக்குகளை பெற்றாலும் அதில் தமாகா உள்பட அனைத்து கட்சியின் வாக்கு சதவீதமும் அடங்கும் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!