News September 12, 2025

சேலம் அரசு ஐடிஐகளில் நேரடி சேர்க்கை மேலும் நீட்டிப்பு!

image

சேலம் மாவட்டத்தில் கோரிமேடு இருபாலர் ஐடிஐ, மகளிர் ஐடிஐ, மேட்டூர் ஐடிஐ, கருமந்துறை மகளிர் ஐடிஐ என 4 அரசு ஐடிஐக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஐடிஐக்களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் செப்.30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐடிஐயில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் அரசின் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

Similar News

News September 12, 2025

சேலம்; பொது இடங்களில் பயன்படுத்தக் கூடாது!

image

சேலம் மாவட்ட காவல்துறையின் குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறை கைபேசி இணையதளம் பயன்படுத்தும் நபர்களுக்கு எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில் பொது இடங்களில் செல்போனில் வைஃபை பயன்படுத்தி பணம் பரிவர்த்தனை செய்யக்கூடாது. இதனால் சைபர் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. என்று எச்சரித்துள்ளனர். சைபர் குற்றங்களுக்கு 1930 அழைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

News September 12, 2025

சாலை விதிகளை கடைபிடிப்பீர். காவல் துறை எச்சரிக்கை

image

சேலம் மாநகர காவல் போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில் சாலை விதிகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை பொதுமக்கள் ஓட்ட வேண்டும், அதிவேகம் ஆபத்தாக முடியும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாதுகாப்பாக பயணம் செய்து நல்ல முறையில் வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

News September 12, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

சேலம் மாவட்டத்தில் இன்று (12.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!