News April 11, 2024
‘G.O.A.T’ திரைப்படம் எந்த OTT?

விஜய் நடிக்கும் ‘G.O.A.T’ திரைப்படத்தின் OTT உரிமையை, நெட்ஃப்லிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை, வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பானது, சென்னை, புதுச்சேரி, திருவனந்தபுரம், ரஷ்யா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. மேலும், இது விஜய்யின் 69ஆவது படம் என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Similar News
News August 12, 2025
ஆகஸ்ட் 12: வரலாற்றில் இன்று

*1948 – கர்நாடகா முதல்வர் சித்தராமையா பிறந்தநாள்.
*1979 – தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் ஏ.வி.மெய்யப்பன் மறைந்த நாள்.
*1990 – அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
*2015 – சீனாவில் தியான்ஜின் மாகாணத்தில் நிகழ்ந்த இரண்டு பெரும் குண்டுவெடிப்புகளில் 173 பேர் உயிரிழந்தனர், 800 பேர் காயமடைந்தனர்.
News August 12, 2025
போலி சாமியார் போக்சோவில் கைது

உத்தரகாண்ட் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியார் போக்சோவில் கைதானான். அம்மாநிலத்தில் ‘ஆப்ரேஷன் கலாநெமி’ என்ற பெயரில் போலி சாதுக்கள், துறவிகள் கைது செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கையில் சிக்கியவன் தான் தீபக் குமார் சைனி. சிவன் வேடத்தில் திரியும் இவன், ஆசி பெற வந்த சிறுமியிடம், வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக கூறி அத்துமீறியுள்ளான். இவன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாம்.
News August 12, 2025
முகமது அலியின் பொன்மொழிகள்

* நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.
*பயிற்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் வெறுத்தேன், ஆனால் ‘விட்டுவிடாதே. இப்போது கஷ்டப்பட்டு, வாழ்நாள் முழுவதும் ஒரு சாம்பியனாக வாழ்’ என கூறிக்கொண்டேன் .
* நான் எங்கே போகிறேன் என தெரியும், நான் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ, அப்படி நான் இருக்க வேண்டியதில்லை. நான் எப்படி இருக்க வேண்டும் என்று சுதந்திரமாக இருக்கிறேன்.