News September 12, 2025
GALLERY: தமிழர்களும்.. துணை ஜனாதிபதி பதவியும்!

நாட்டிற்கு அதிக துணை ஜனாதிபதிகளை வழங்கிய மாநிலம் தமிழ்நாடுதான். இன்று துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றுள்ள நிலையில், அவருக்கு முன்பாக இருவர் அப்பதவியை அலங்கரித்துள்ளனர். இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன், 1952 முதல் 1962(10 ஆண்டுகள்) வரை பதவியில் இருந்தார். அவருக்கு அடுத்து, ஆர்.வெங்கட்ராமன் 1984 முதல் 1987(4 ஆண்டுகள்) வரை அப்பதவியில் இருந்தார்.
Similar News
News September 12, 2025
முடி கொட்டுதா? குளிக்கும்போது இதெல்லாம் பண்ணாதீங்க!

➤சூடான நீரில் குளிப்பது தலை முடிக்கு நல்லதல்ல. ➤தலைக்கு நேரடியாக ஷாம்பு பயன்படுத்த வேண்டாம். அதனை தண்ணீரில் கலந்த பிறகு தலையில் தேய்க்கவும். ➤சல்பேட் இல்லாத ஷாம்புவை பயன்படுத்துவது நல்லது. ➤தலைக்கு குளிப்பதற்கு முன், தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் முடியின் வேர் பலப்படும். ➤குளித்த பிறகு துண்டால் முடியை அழுத்தி தேய்க்க வேண்டாம். SHARE IT.
News September 12, 2025
தொண்டர்களுக்கு தவெக போட்ட ரூல்ஸ்

மக்கள் சந்திப்பு பயணத்தை திருச்சியில் இருந்து விஜய் நாளை தொடங்குகிறார். தொண்டர்கள் சில நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு தவெக அறிவுறுத்தியுள்ளது. *விஜய்யின் வாகனத்தை பின்தொடர கூடாது *அனுமதியின்றி அலங்கார வளைவுகள், பேனர்கள் வைக்கக் கூடாது* கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள் கூட்டத்துக்கு வர வேண்டாம் *மரங்கள் மீது ஏறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. (பிரசார வாகன போட்டோஸ் மேலே கொடுக்கப்பட்டுள்ளது)
News September 12, 2025
BREAKING: அண்ணாமலை விலகலா? பாஜகவில் சலசலப்பு

பதவி மாற்றப்பட்டதில் இருந்தே, அண்ணாமலை அமைதியான போக்கை கடைபிடித்து வருகிறார். அண்மையில், <<17671440>>திமுகவை பாராட்டி<<>> பேசிய அவர், துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், நிலம் வாங்கியதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக என்பதை எங்கேயும் குறிப்பிடவில்லை. Ex IPS என்றே குறிப்பிட்டுள்ளார். இதனால், அவர் கட்சியில் இருந்து விலகுகிறாரா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுந்துள்ளது.