News September 12, 2025

திருச்சி அருகே முதியவர் அடித்து கொலை

image

துறையூர் அருகே உள்ள சொரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (70). இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மகாலிங்கம் தனது வீட்டின் அருகே அமர்ந்திருந்த போது, அங்கு மதுபோதையில் வந்த கணபதி (40) என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணபதி, மகாலிங்கத்தை கட்டையால் தலையில் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதையடுத்து துறையூர் போலீசார் கணபதியை கைது செய்தனர்.

Similar News

News September 13, 2025

திருச்சி: ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருச்சியில் அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான குறைதீர் கூட்டம் வரும் அக்.10 ஆம் தேதி, ஆட்சியர் அலுவலகதில் நடைபெற உள்ளது. இதில் ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் உள்ள குறைபாடுகளை குறிப்பிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்பிய நபர்கள் மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News September 13, 2025

திருச்சி: திட்ட முகாமில் 1556 மனுக்கள் பதிவு

image

திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (செப்.12) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பெருவளநல்லூர் பகுதியில் நடைபெற்ற முகாமில் அதிகபட்சமாக 480 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். மேலும் மணிகண்டம் ஒன்றியத்தில் 180, துறையூர் ஒன்றியத்தில் 213, திருவெறும்பூர் ஒன்றியத்தில் 257 மனுக்கள் என மொத்தம் 1556 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 12, 2025

திருச்சி: ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு

image

திருச்சி ஊர்க்காவல் படை அமைப்பில் 53 ஆண் ஊர்காவல் படையினரும், 4 பெண் ஊர்க்காவல் படையினரும் என மொத்தம் 57 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சேர விரும்புவோர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்து செப்.,22-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என திருச்சி எஸ்.பி செல்வ நாகரத்தினம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!