News September 12, 2025
காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: கலெக்டர் அறிவுறுத்தல்

தேனி: அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளில் பதிவாகும் காய்ச்சல் நோயாளிகளின் பதிவுகளை சரிபார்க்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் பகுதியில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என சுகாதாரத்துறைக்கு அம்மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News September 12, 2025
தேனியில் அதிகரிக்கும் வழிப்பறி மக்களே உஷார்

பெரியகுளம் பகுதியை சேர்ந்த ராஜா முகமது (49) நேற்று (செப்.11) நள்ளிரவு வேலை முடிந்து வீடு திரும்பி உள்ளார். அப்போது வசந்த், பியோ பேபியஸ், ராமர் ஆகியோர் ராஜா முகமதுவை வழிமறித்து குடிப்பதற்கு பணம் கேட்டு அவரிடம் வழிப்பறி செய்துள்ளனர். இதனை தட்டிக் கேட்ட ராஜலிங்கம் என்பவரை அரிவாள் கொண்டு தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரில் தென்கரை போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்தனர்.
News September 12, 2025
போடி: கழுத்தை நெறித்த கடன்! வீபரித முடிவு

போடி மீனாட்சிபுரம் காந்தி மெயின் ரோட்டில் வசிப்பவர் தயாளன் 50. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அதிக அளவில் கடன் வாங்கியதால் கடனை செலுத்த முடியாமல் மது குடித்து வந்துள்ளார்.மனம் உடைந்த தயாளன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி மஞ்சுளா புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 12, 2025
தேனி: 50% மானியத்தில் கிரைண்டர்!

தேனி மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா?? அப்போ தமிழக அரசு 5000 மானியம் புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்க வயது 25க்கு மேல் இருக்க APPLY பண்ணலாம். வேண்டும். தென்காசி மாவட்ட சமூக நல அலுவரிடம் உங்கள் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பியுங்க.. பெண்களுக்கு SHARE பண்ணி APPLY பண்ண சொல்லுங்க.