News September 12, 2025
RECIPE: ஹெல்தியான வரகரிசி தட்டை!

சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வரகரிசி உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். அதோடு குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் மொறு மொறு வரகரிசி தட்டை Recipe இதோ.
*கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை அரைத்து மசாலாவாக ரெடி செய்யவும்.
*இத்துடன் வரகரிசி மாவு & உளுத்தம் பருப்பு மாவு & உப்பு சேர்த்து சிறிய தட்டைகளாகத் தட்டவும்.
*அதை எண்ணெயில் பொரித்தெடுத்தால், சுவையான வரகரிசி தட்டை ரெடி. SHARE IT.
Similar News
News September 12, 2025
20- 30 வயதுடையவர்களை பாதிக்கும் ‘Cardiac Ageing’

50 வயதில் ஏற்படும் மாரடைப்பு, இப்போது 20- 30 வயதில் இருப்பவர்களையே பாதிக்கிறது. இதனை டாக்டர்கள் ‘Cardiac ageing’ என்கிறார்கள். அதாவது வயதை விட இதயம் வேகமாக முதுமை அடைந்து வருவதை இது குறிக்கிறது. நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்தல், ஸ்ட்ரெஸ், தூக்கமின்மை, அதிக ஸ்கிரீன் டைம், மது, புகை போன்றவை இதயத்தை அதிகமாக பாதிக்கிறதாம். எனவே, உடற்பயிற்சி, நல்ல உணவு, போதிய தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
News September 12, 2025
மோதும் உலக சாம்பியன்கள்: இது ஒரு வரலாற்று தருணம்!

செஸ் விளையாட்டில் ஆண்கள் உலக சாம்பியனான டி.குகேஷ், பெண்கள் உலக சாம்பியனான திவ்யா தேஷ்முக் இருவரும் இன்று கிராண்ட் ஸ்விஸ் போட்டியில் மோதுகின்றனர். இருவருக்கும் 19 வயது, இந்தியர்கள், தங்களை விட அதிக ரேட்டிங்கில் இருக்கும் வீரர்களை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனவர்கள் – இப்படி பல ஒற்றுமைகள் கொண்ட இரு மாபெரும் சாதனையாளர்கள் மோதும் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
News September 12, 2025
செல்போன் ரீசார்ஜ் 1 ஆண்டுக்கு இலவசம்? CLARITY

‘Narendra Modi Free Recharge Scheme’ திட்டத்தில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், BSNL என அனைத்து செல்போன் நெட்வொர்க்கிலும் ஓராண்டுக்கு இலவச ரீசார்ஜ் செய்யலாம் என தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம்(PIB FACTCHECK) விளக்கம் அளித்துள்ளது. இது வெறும் வதந்தி என்றும், மத்திய அரசின் திட்டங்களை myscheme.gov.in. இணையதளத்தில் செக் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.