News September 12, 2025
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

விழுப்புரம் மாவட்டத்தில், கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவி தொகையுடன் திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கப்படுகிறது என, தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்; 1400 கட்டுமான தொழிலாளர்களுக்கு, திண்டிவனம், மொளசூர் அரசு தொழிற் பயிற்சி மையத்தில், வரும் 15ம் தேதி இந்த பயிற்சி துவங்கும் எனவும், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, பயன்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 12, 2025
விழுப்புரம்: தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியம்

தொழில் தொடங்க அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கி வருகிறது. இதில் ரூ.75 லட்சம் திரும்ப செலுத்த தேவையில்லை(25%மானியம்). தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணபிக்க வேண்டும். பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% மற்றும் பிற பிரிவினர் 5% செலுத்த வேண்டும். 21-35 வயதிற்குட்பட்டவர்கள் <
News September 12, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மழை அளவு நிலவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று(செப்.11) பதிவான மழையின் அளவு
▶️ ஆனந்தபுரம் – 45.2 மிமீ
▶️ முண்டியம்பாக்கம் – 38 மிமீ
▶️ நெமூர் – 29.2 மிமீ
▶️ கஞ்சனூர் – 26.4 மிமீ
▶️ சூரப்பட்டு – 20 மிமீ
▶️ கோலியனூர் – 18 மிமீ
▶️ வளவனூர் – 16 மிமீ
▶️ விழுப்புரம் – 14 மிமீ
▶️ கேதார் – 14 மிமீ
▶️ முகையூர் – 12 மிமீ
▶️ வானூர் – 12 மிமீ
இன்றும்(செப்.12) மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News September 12, 2025
தென்பெண்ணை ஆறு: வெள்ள அபாய எச்சரிக்கை

சாத்தனூர் அணை நீர்த்தேக்க விதியின்படி முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் உபரி நீர் அணையின் நீர்மின் நிலையத்தின் வழியாக முதல் கட்டமாக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.