News September 12, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாள்களாக மாற்றமின்றி இருந்த நிலையில், இன்று(செப்.12) தாறுமாறாக மாறியுள்ளது. அதன்படி, 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹90 உயர்ந்து ₹10,240 ஆகவும், சவரன் ₹720 அதிகரித்து ₹81,920 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வரலாறு காணாத புதிய உச்சமாக 1 சவரன் தங்கம் ₹82,000-ஐ நெருங்கியுள்ளதால் நடுத்தர மக்களின் தங்கம் வாங்கும் கனவு கனவாகவே போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
Similar News
News September 12, 2025
ரோஹித்தை பார்த்து கிரிக்கெட் கற்றேன்: ஜித்தேஷ் நெகிழ்ச்சி

உள்ளூர் மற்றும் IPL போட்டிகளில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக அசத்திய ஜித்தேஷ் சர்மாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், தனது முதல் பயிற்சியாளர் யூடியூப் என்றும், அதை பார்த்துதான் கிரிக்கெட் விளையாட தொடங்கினேன் எனவும் ஜித்தேஷ் தெரிவித்தார். சிறுவயதில் ரோஹித்தின் வீடியோக்களை அதிகம் பார்ப்பேன் என கூறிய ஜித்தேஷ், ஆட்ட நுணுக்கங்களை அவரிடம் இருந்து தெரிந்துகொண்டதாகவும் கூறினார்.
News September 12, 2025
ஐபோன் 17 புக்கிங் தொடக்கம்.. எதில் ஆர்டர் செய்யலாம்?

ஐபோன் 17 சீரிஸ் போன்களுக்கான புக்கிங், இந்தியாவில் இன்று தொடங்குகிறது. அதேபோல், ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ், ஏர்பாட்ஸ் ப்ரோ 3 ஆகியவற்றையும் இன்று புக் செய்யலாம். மாலை 5.30 மணிக்கு மேல் ஆப்பிள் நிறுவனத்தின் வலைதளத்தில் புக்கிங் செய்யலாம். அதேபோல் குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸில் ஆர்டர் செய்யலாம். இன்று ஆர்டர் செய்யப்படும் போன்கள், வரும் 19-ம் தேதி டெலிவரி செய்யப்படும்.
News September 12, 2025
மக்களின் கருத்து முக்கியம்: PMக்கு ஸ்டாலின் கடிதம்

சுரங்க திட்டங்களுக்கு மக்களின் கருத்துகளை கேட்கும் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கும் உத்தரவுக்கு CM ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனை திரும்ப பெற கோரி PM மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சில சுரங்கங்களால் சுற்றுச்சூழல், வனம் உள்ளிட்டவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.