News April 11, 2024
இலுப்பூரில் விஏஓ-வை தாக்கி கைப்பேசி பறிப்பு

பூதகுடி கிராம நிா்வாக அலுவலா் லட்சுமி காந்தன் பணி நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் இலுப்பூா் கோட்டாட்சியரகம் சென்றுவிட்டு மீண்டும் இலுப்பூா்- விராலிமலை சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தாா். அப்போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த 4 இளைஞா்கள் விஏஓ-வின் வாகனத்தை மறித்து தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 19, 2026
புதுக்கோட்டை: பணத்தை பாதுகாக்க இத தெரிஞ்சிக்கோங்க!

உங்கள் Bank Account-ல் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, cybercrime.gov.in என்ற இணையத்தில் புகார் அளித்து உங்கள் பணத்தை மீட்க முடியும். அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..
News February 19, 2026
புதுக்கோட்டை: தண்ணீர் பாட்டிலால் பறிப்போன உயிர்

புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூரிலிருந்து எருச்சிக்கு நேற்று ராஜா(65) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த தண்ணீர் பாட்டில் பைக்கின் பின்புற சக்கரத்தில் சிக்கியதில் பைக்கிலிருந்து கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து அவரது மனைவி கல்யாணி அளித்த புகாரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 19, 2026
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.18) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


