News September 12, 2025

நாகை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று (செப்.12) நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

Similar News

News September 12, 2025

நாகை மக்களே… தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை !

image

நாகை மக்களே… SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 12, 2025

நாகையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்!

image

வேளாங்கண்ணியில் இருந்து சென்னை தாம்பரம் வரை இன்று(செப்.12) இரவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் நாகை, மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்தை அடைகிறது. இரவு 11 மணிக்கு வேளாங்கண்ணியில் புறப்படும் ரயில் நாளை காலை 7.30 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இதில் 7 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. SHARE IT.

News September 12, 2025

நாகையில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

image

நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவளை ஆகிய தாலுகாக்களில் உள்ள நீதிமன்றங்களில் நாளை தேசிய மக்கள் நீதி மன்றம் நடைபெற உள்ளது. இதில் சமரசமாக பேசி முடித்துக் கொள்ளப்படும் அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மேலும் இந்த வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது என்று மாவட்ட நீதிபதி திரு கந்தகுமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!