News September 12, 2025
தூத்துக்குடி மீனவருக்கு ஜாமின்

தூத்துக்குடியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது கடந்த 2018ம் ஆண்டு அவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து அவர் வழக்கிற்கு ஆஜராகவில்லை என நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து அவரை கைது செய்தது. நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான சுரேஷை வாரம் ஒரு முறை கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.
Similar News
News September 12, 2025
தூத்துக்குடி மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

தூத்துக்குடி மக்களே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவை அவசியாக தேவைக்கப்படும் ஆவணங்களாக உள்ளது. இவை தொலைந்துவிட்டால் நேரடியாக அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
News September 12, 2025
திருச்செந்தூர் கோவிலை உறுதிமொழி குழுவினர்ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் குழு உறுப்பினர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் (சேலம் மேற்கு), மாங்குடி (காரைக்குடி), எம்.கே.மோகன் (அண்ணா நகர்) ஆகியோர் இன்று 12.9.25 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பாடசாலையை பார்வையிட்டு கள ஆய்வு நடத்தினர்.
News September 12, 2025
தூத்துக்குடி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தூத்துக்குடி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிஞ்சுக்கோங்க. 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000479, 9445000481, 9445000480 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.