News September 12, 2025
நாமக்கல்: ரேஷன் கார்டில் பிரச்னையா..? இங்க போங்க!

நாமக்கல் மக்களே.., நமது மாவட்டத்தில் நாளை(செப்.13) ரேஷன் கார்டு குறைதீர் நாள் முகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நாமக்கல், இராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலூர் மற்றும் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 12, 2025
நாமக்கல்லில் இலவசம்.. உடனே APPLY பண்ணுங்க!

நாமக்கல் மக்களே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு இலவசமாக வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சி 3 மாதம் வழங்கபடவுள்ளது. இப்பயிற்சியை முழுமையாக முடிப்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கே <
News September 12, 2025
தங்க கவசத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில், ஆவணி மாத வெள்ளிகிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் காலை 10:30 மணியளவில், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள் சொர்ணம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த அபிஷேகத்துக்கு பிறகு, ஆஞ்சநேயர் தங்ககவச சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
News September 12, 2025
நாமக்கல்லில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் இயங்காது

நாமக்கல்: சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை(செப்.12) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் இயங்காது என நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக முகாம் நடைபெற்றதால் முகாம் இயங்காது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர். இதை உடனே SHARE!