News September 12, 2025
விழுப்புரத்தில் 5 கோடி ரூபாய் மோசடி

விழுப்புரம் மாவட்டம், பொம்மையார்பாளையத்தைச் சேர்ந்த மஹதி என்ற முதியவரிடம், அரண்மனை கட்ட ஒப்பந்தம் செய்து, 5 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மயிலாடுதுறை பூம்புகார் பகுதியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் சித்தார்த் என்பவரை விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பணத்தை பெற்றுக்கொண்டு கட்டிடம் கட்டாமல் சித்தார்த் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
Similar News
News September 19, 2025
விழுப்புரத்தில் உள்ளவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது. 8th, SSLC, +2, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!
News September 19, 2025
விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(செப்.19) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
▶️கரும்பு திருமண மண்டபம், விழுப்புரம்
▶️ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், பிடாகம்
▶️பஞ்சாயத்து அலுவலக வளாகம், பரனூர்
▶️VPRC கட்டிட வளாகம், செண்டூர்
▶️VPRC கட்டிட வளாகம், சாலவாடி
▶️ராமானூஜர் திருமண மஹால், பல்லரிபாளையம், சித்தலிங்கமடம்
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
News September 18, 2025
நலமான பெண்கள் வளமான குடும்பம் மருத்துவ முகாம்

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று முதல் அக்டோபர் 2 ஆம் தேதிவரை ‘நலமான பெண்கள் வளமான குடும்பம்’ என்ற சிறப்பு மருத்துவ முகாம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
சிறுவாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இன்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கலந்து கொண்டு மகளிருக்கு சுகாதார பெட்டகங்களை வழங்கினார்.