News September 12, 2025
மதுரை: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க!

மதுரை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
Similar News
News September 12, 2025
மதுரையில் திருநங்கை திடீர் தற்கொலை..!

மதுரை அஹிம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை இசக்கிமுத்து (எ) தீபிகா 29. இவர் சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி ஆலங்குளம் பகுதியில் வசித்து வந்துள்ளார். அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்லும் இசக்கிமுத்து (எ) தீபிகா நேற்று வீட்டிற்கு வந்தபோது சரிவர யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். அடுத்த சிறிது நேரத்தில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 12, 2025
மதுரை: ரேஷன் கார்டில் பிரச்சனையா?..இது பண்ணுங்க

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நாளை (செப்.13) காலை 10 மணி முதல் பகல்1 மணி வரை சிறப்பு ரேஷன் குறைதீர் முகாம் நடக்கும். முகாமில் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற ஏராளமான ரேஷன் சிறப்பு சேவைகள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நல்ல தகவலை ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 12, 2025
துணை ஜனாதிபதிக்கு மதுரை எம்பி வாழ்த்து

மதுரை துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மதுரை எம்பி வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்திய குடியரசின் நியதியை காக்க போட்டியிட்ட இந்திய கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி அவர்களுக்கு பாராட்டுக்கள். மாநிலங்களவையை ஜெகதீப் தன்கர் நடத்திய விதம் அநீதியானது. இறுதியில் தன்கர் நடத்தப்பட்ட விதம் அதைவிட அநீதியானது என்றும் பதிவிட்டுள்ளார்