News April 11, 2024
108 ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை

துவாக்குடி விஓசி நகரை சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி சித்திரா (26). இவருக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டது. பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஆண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் பணியாளர்களான அவசர மருத்துவ உதவியாளர் ராஜ்குமார், அண்ணாதுரை ஆகியோரை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News July 7, 2025
திருச்சி: வங்கியில் வேலை! மாதம் ரூ.85,000 சம்பளம்

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் திருச்சி உட்பட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு <
News July 7, 2025
திருச்சி: தபால் நிலையத்தில் மொபைல் சார்ஜிங் வசதி அறிமுகம்

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையத்தில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தலைமை தபால் நிலையத்தில் “மொபைல் சார்ஜிங் நிலையம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இணைப்புகள் கொண்ட இந்த மொபைல் சார்ஜிங் நிலையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மண்டல பொது மேலாளர் நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.
News July 7, 2025
திருச்சி: டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மணப்பாறை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நாளை மணப்பாறை பகுதியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று திருச்சி வந்தடைந்தார். அவருக்கு திருச்சி விமான நிலையத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அமமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.