News April 11, 2024
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தேனி நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளித்தனர். இதில் தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் மூத்த குடிமக்கள் 576,மாற்றுத்திறனாளிகள் 586 என மொத்தம் 1162 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அலுவலர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.
Similar News
News April 19, 2025
ஆசிரியர் பணி வாங்கித்தருவதாக ரூ.88 லட்சம் மோசடி

தேனியை சேர்ந்த சிரஞ்சீவி என்பவர் தனது தங்கை பவித்ராவிற்கு அரசுப் பள்ளியில் முதுநிலை ஆசிரியர் பணி பெற்று தருவதாக கூறியுள்ளார். அதற்கு திண்டுக்கல்லை சேர்ந்த சூரஜ் என்பவரிடம் ரூ.88 லட்சம் கொடுத்துள்ளார். அவர் போலி பணி ஆணை வழங்கி மோசடி செய்துள்ளார். சிரஞ்சீவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சூரஜை நேற்று (ஏப்.18) கைது செய்தனர்.
News April 19, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 19) நீர்மட்டம்: வைகை அணை: 56.27 (71) அடி, வரத்து: 110 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 105 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.50 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 99.38 (126.28) அடி, வரத்து: 21.40 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 39.10 (52.55) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: இல்லை.
News April 19, 2025
தேனி மக்களுக்கு சூப்பர் APP

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை, மருத்துவ உதவி உட்பட பல்வேறு இன்னல்களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. *RAIL MADDED* என்ற அப்ளிகேஷனை இந்த <